Friday 13 April 2012

சினிமா : எதிர் நீச்சல்



My favorite  movie to watch 


good motivational movie

ஒரு கல் ஒரு கண்ணாடி


ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் கதையே இல்லை என்று தயாரிப்பாளரும், பட கதாநாயகனுமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.


சினிமாவில் நடித்திருப்பது குறித்து அவர் கூறுகையில், நடிக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் நீங்களே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தால் என்ன? என்று கேட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மவுனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.

வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன், ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்துக்கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என நினைத்தபோது டைரக்டர் பாண்டிராஜ் என்னிடம் 'வம்சம்' படத்தின் கதையை சொன்னார்.

'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்கு சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது. அப்போது கதாநாயகனாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்த கதை அவனுக்குப் பிடித்திருந்தது.
அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் கதை சொன்னார். சுத்தமாக புரியவில்லை அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது.
ஏனென்றால் அதில் கதையே இல்லை. அப்படி ஒரு கதைதான் எனக்கு தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின், 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்கு பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Best Ever Tamil movies


  1. நாயகன்
  2. தளபதி
  3. மூன்று  முகம்
  4. பதினாறு வயதினிலே
  5. குணா
  6. மூன்றாம் பிறை 
  7. தேவர் மகன்
  8. கன்னத்தில் முத்தமிட்டால்
  9. ரோஜா
  10. முள்ளும் மலரும் 
  11. ஆறிலிருந்து அறுபது வரை
  12. குருதிப்புணல்
  13. பாரதி
  14. ரமணா
  15. இருவர்
  16. பாட்ஷா
  17. ரத்தக்கண்ணீர்
  18. மொழி
  19. காதல்
  20. தில்லானா
  21. வீடு
  22. வேதம் புதிது
  23. உதிரி பூக்கள்
  24. திருவிளையாடல்
  25. சர்வர் சுந்தரம்
  26. அந்த நாள்
  27. சந்திரலேகா 
  28. கல்யாண பரிசு
  29. அவள் ஒரு தொடர்கதை 
  30. முள்ளும் மலரும்
  31. காதலிக்க நேரமில்லை
  32. அந்த நாள்
  33. அதே கண்கள்
  34. தில்லு முள்ளு 
  35. வீரபாண்டிய கட்டபொம்மன்
  36. கர்ணன் 

Thursday 12 April 2012

திருக்குறள் பற்றி T.ராஜேந்தர் பேச்சு

திருக்குறள்  பற்றி ராஜேந்தர்  பேச்சு 

வழக்கம் போல தல இன் வெறி ஆட்டம் 

பார்த்து ரசிக்க !


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JGUC2vzeEIg

Thursday 5 April 2012

யுவன் தயாரிக்க, அஜீத் நடிக்க... புதிய படம்!





யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.

சில
ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த்
கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர் அவர்களின்
நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல்
பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத்
குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக
வைத்திருந்தார்.

இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.

அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.

இந்த படத்துக்கு இசையமைப்பவர் யுவன்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!